ஷா ஆலம், ஜூலை 24-
சிலாங்கூரிலுள்ள சில ஆறுகள் மாசடைந்துள்ளதால், 7 வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக தடை, வரும் வெள்ளிக்கிழமைக்குள் முழுமையாக சீரடையும் என மாநில கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான செயற்குழு தலைவர் இஜ்ஹாம் ஹாஷிம் தெரிவித்தார்.
நேற்று மாலை மணி 3 அளவில் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம், கொஞ்சம் கொஞ்சமாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நீர் அழுத்தம் குறைவான பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு நீர் விநியோகம் தாமதமாக கிடைக்கும். ஆயினும், இதர பகுதிகளில் பெரும்பகுதி குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத்தைப் பெறுவார்கள் என IZHAM கூறினார்.
இதனிடையே, ஆற்றில் கழிவுகளை வெளியேற்றி, நீர் விநியோக தடையை ஏற்படுத்திய தரப்புக்கு, செலாயாங் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்துள்ளதாக IZHAM குறிப்பிட்டார்.