கோலாலம்பூர், ஜூலை 24-
உலகில் மிக சக்தி வாய்ந்த கடப்பிதழ் தர வரிசைப் பட்டியலில் 11 இடத்தில் இருந்த மலேசியா, தற்போது 12 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Henley Passport Index – ஸினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த கடப்பிதழ் தரவரிசையானது, ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடப்பிதழ் மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 199 நாடுகளின் கடப்பிதழ்களை அந்த நிறுவனம் மதிப்பீடு செய்ததில் மலேசிய கடப்பிதழை வைத்திருப்பவர்கள், உலகளாவிய 227 இடங்களில் 182 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மலேசிய கடப்பிதழ் உலக நாடுகளில் மிக சக்தி வாய்ந்த கடப்பிதழாக அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆண்டில் கடப்பிதழ் தர வரிசையில் மலேசியா எட்டாவது இடத்தை பிடித்திருந்தது.
சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. சிங்கப்பூர் மக்கள் 192 நாடுகளுக்கு விசாயின்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூருக்கு அடுத்த ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலக தர வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளன.