e- Kasih பெற்றுத் தருவதாக ஏமாற்றிய நபருக்கு சிறை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24-

உதவித் தேவைப்படுகின்றவர்களுக்கு அரசாங்கத்தின் உதவித் திட்டமான e- Kasih உதவியை பெற்றுத் தருவதாக கூறி, பாமர மக்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக உடல் உழைப்புத் தொழிலாளர் ஒருவருக்கு 21 ஆண்டு ஆண்டுகள் சிறையும் 14 பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இன்று ஈப்போவில் இரு வெவ்வேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட 49 வயது முஹம்மது ஹல்மி இஸ்மாயில் என்ற அந்த தொழிலாளிக்கு எதிராக மொத்தம் 13 மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

இந்த 13 குற்றங்களுக்கும் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் தண்டனை ஏகக்காலத்தில் அமலுக்கு வருவதால் அந்த நபர் 4 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS