தைவானில் புயல், மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் ரத்து

கோலாலம்பூர், ஜூலை 24-

Gaemi சூறாவளி புயலினால் தைவானில் எதிர்பார்க்கப்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கோலாலம்பூருக்கும் – தைபே- க்கும் இடையிலான விமானச் சேவைகளை மலேசிய ஏர்லைன்ஸ இன்று ரத்து செய்துள்ளது.

MH 366 மற்றும் MH367 ஆகிய இரண்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தங்கள் பயணத்தை மாற்ற விரும்பினால் அல்லது பயணத்தை முற்றாக ரத்து செய்யவிரும்பினால் மலேசிய ஏர்லைன்ஸின் My Booking என்ற அகப்பக்கத்தில் முன்பதிவின் மூலம் தங்கள் விருப்புரிமையை பதிவேற்றம் செய்யலாம் என்று அந்த தேசிய விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS