கோலாலம்பூர், ஜூலை 24-
உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான பேராசிரியர் அந்தைஸ்தை கொண்ட முக்கிய அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான 2 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தி, முறைகேடு புரிந்ததன் காரணமாக அந்த தலைமை செயல்முறை அதிகாரி கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.
நேற்று இரவு 7 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள SPRM தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட 60 வயதுடைய அந்த பேராசியரை விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
அந்த பேராசிரியர் இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.