ஷா ஆலம், ஜூலை 24-
நேபாள தலைநகர் Kathmandu-வில் இன்று காலையில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் நடப்பு நிலையை விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள Tribhuvan அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 208 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நேபாளின் இரண்டாவது முக்கிய நகரான Pokhara- வை நோக்கி உயரே பறக்க தயாரான அந்த சிறிய விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி தீப்பிடித்துக்கொண்டது. இதில் 22 பேர் கருகி மாண்டது உறுதி செய்யப்பட்டது.
முக்திநாத் திருக்கோவில் திவ்ய தரிசனம் உட்பட இமயமலையின் ஆன்மிகத் தளங்களுக்கு செல்ல மலேசியர்கள் உட்பட வெளிநாட்டு இந்துக்கள் Pokhara- வை பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக Jom Sam நகருக்கு செல்ல அவர்கள் சிறிய ரக விமானத்தைப் பயன்படுத்துகின்றனர்.