புத்ராஜெயா, ஜூலை 24-
சிப்பாங்கில் உள்ள சீனப்பள்ளி ஒன்று, மதுபான நிறுவனமான Tiger Beer கம்பெனியிடமிருந்து நிதி பெற்றது தொடர்பான விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் பொறுப்பை கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்- கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர்ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டதாக தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில்l குறிப்பிட்டார்.
எனவே இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்கும் பொறுப்பு கல்வி அமைச்சரிடமே விடப்பபட்டுள்ளது. அமைச்சரவையில் என்ன நடந்தது என்பது குறித்து ஃபத்லினா சிடெக்- கிடமே கேட்டறியமாறு செய்தியாளர்களுக்கு ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தினார்.