அம்னோ தலைவர்களை சந்தித்தது உண்மையே ஆனால் அரசியல் வியூகம் குறித்து விவாதிக்கப்படவில்லை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24-

பாஸ் தேர்தல் இயக்குநர் சனூசி கூறுகிறார்

வரும் பொதுத் தேர்தலில் அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் அரசியல் ஒத்துழைப்பு ஏற்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வரும் வேளையில் அம்னோ தலைவர்களை சந்தித்தது உண்மையே என்று பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சானுசி நோர் தெரிவித்துள்ளார்.

எனினும் அம்னோ தலைவர்களை தாங்கள் சந்தித்தப் போதிலும் வருகின்ற பொதுத் தேர்தலில் அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பது கொள்வது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று கெடா மந்திரி பெசாரான சனூசி நோர் குறிப்பிட்டார்.

அரசியல் ஒத்துழைப்பு கொள்வது குறித்து பாஸ் கட்சித் தலைவரை தாம் சந்திக்கவில்லை என்று அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

அகமட் ஹாஹிட்டின் இந்த அறிவிப்பு தொடர்பில் எதிர்வினையாற்றிய சனூசி நோர், அரசியல் ஒத்துழைப்பு குறித்து எதுவும் பேசவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், சந்திப்பு நடைபெற்றது என்றார.

அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது குறத்து அம்னோ தலைவர்கள் சிலர், பாஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பதாக கடந்த திங்கட்கிழமை பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்னோவும், பாஸ் கட்சியும் அரசியல் ஒத்துழைப்பு கொள்ளப்பபட்டால் வரும் பொதுத் தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS