சிலாங்கூர்,ஜூலை 25-
சிலாங்கூர்,குவாங்-ங்கிள்ள நெகிழி சார்ந்த தொழிற்சாலையில் கொள்கலனில் ஏற்பட்ட கசிவினால், சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆகிய ஆறுகள் மாசடைந்ததோடு, நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டன.
அது தொடர்பில், இருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர்
டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாபர்தெரிவித்தார்.
இரு ஆறுகளில் வீசிய தூர்நாற்றத்தை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலிருந்து கால்வாய் வழி வெளியாகியிருந்த POLY METHA ACRYLIC ACID எனும் திரவம், ஆறுகளில் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றாரவர்.