தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டி தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை முதலில் பவுலிங் செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர் அமித் சாத்விக் 0 ரன்னில் வெளியேற, துஷார் ரஹேஜா மற்றும் எஸ் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ரஹேஜா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பாலசந்தர் அனிருத் 14 ரன்னிலும், முகமது அலி 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த கணேஷ் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நெல்லி அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இம்மானுவேல் செரியன், சோனு யாதவ், எஸ் ஹரிஷ், கோகுல் மூர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.