சுங்கை பெட்டானி,ஜூலை 25-
கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் கணவனும் மனைவியும் அதிர்ஷ்டசவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கெடா, சுங்கை பட்டாணி, எஸ்பி சௌஜனா- வில் நிகழ்ந்தது.
கணவனும் மனைவியும் எஸ்பி சௌஜனா -விலிருந்து Ambangan Heights என்ற இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது கார், தீடிரென்று தீப்பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கார் முழுவதும் தீயின் ஜுவாலைகள் சூழ்வதற்கு முன்னதாகவே காரை நிறுத்திவிட்டு, கணவனும், மனைவியும் வெளியேறியதால் இருவரும் உயிர் தப்பிக்க முடிந்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.