அந்த சந்தேகப்பேர்வழி நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

தஞ்சோங் மாலிம் , ஜூலை 25-

தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்காகத்தின் முன்னாள் மாணவி 25 வயது நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு போலீஸ்காரர் நாளை வெள்ளிக்கிழமை கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

பேரா, சிலீம் ரீவர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 26 வயதுடைய அந்த போலீஸ்காரருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவியின் காதலன் என்று நம்பப்படும் அந்த போலீஸ்காரர் தொடர்புடைய அனைத்து சாட்சியப்பொருட்களும் திரட்டப்பட்ட பின்னர் அவர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்.

சரவாக், மீரியை சேர்ந்த நூர் ஃபரா கர்தினி -, கடந்த ஜுலை 15 ஆம் தேதி உலுசிலாங்கூர், உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளெடாங்-கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அந்த முன்னாள் மாணவியின் விவேக கைப்பேசி, கார் சாவி போன்ற முக்கிய ஆதாரப்பொருட்களை அரச மலேசிய போலீஸ் படையின் தடயவியல் பிரிவைச் சேர்ந்த முக்குளிப்போர், சடலம் கிடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் மீட்டனர்.

WATCH OUR LATEST NEWS