சபாக் பெர்னம், ஜூலை 25-
பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக அரச மலேசியப் போலீஸ் படையில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜுன் மாதம் வரையில் ஆயிரத்து 671 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத்துறை தெரிவித்துள்ளளது.
இதேகாலகட்டத்தில் 15 ஆயிரத்து 546 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.
தவிர 40 ஆயிரத்து 436 ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணை அறிக்கைகளும் இதே காலகட்டத்தில் திறக்கப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.