கோலாலம்பூர், ஜூலை 25-
இந்தியர்களை இலக்காக கொண்டு, ராசிப்பலன்கள் பெயர்கள் உட்பட மூன்று பிரதான முதலீட்டுத் திட்டங்களில் 85 லட்சம் வெள்ளிக்கு முதலீடு செய்யப்பட்டு, மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்துகேவ்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த டத்தோ முருகன் சுப்பிரமணியம் என்பவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
லைசென்ஸ்யின்றி மக்களிடமிருந்து முன்பணம் பெற்றதாக 2013 ஆம் ஆண்டு நிதி சேவை சட்டத்தின் கீழ் 47 வயதுடைய டத்தோ முருகன் சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது 5 கோடி வெள்ளி அபராதம் அல்லது இரண்டு விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் டத்தோ முருகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
பலத்த போலீஸ்காவலுடன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு டத்தோ முருகன், கோலாலம்பூர் ஜாலான் டூத்தா, செஷன்ஸ் நீதிமன்ற கட்டடத்திற்க கொண்டு வரப்பட்ட போது. அவரின் முதலீட்டுத் திட்டத்தை நம்பி லட்சக்கணக்கான வெள்ளி பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படும் சில முதலீட்டாளர்களும் நீதிமன்றத்தில் காணப்பட்டனர்.
தங்களின் வாழ்நாள் சேமிப்புப்பணத்தை பயன்படுத்தி முதலீடு செய்த மக்களின் பணத்தை சூறையாடிய டத்தோ முருனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரித அண்மையில் மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்களான ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஈஸ்வரி ஆகியோர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் மகஜரையும் சமர்ப்பித்து இருந்தனர். .
பத்துகேவ்ஸ் வட்டாரத்தை தளமாக கொண்டு கொண்டு, முருகன் சுப்பிரமணியத்தால் தொடங்கப்பட்ட ராசி பலன்கள் பெயர்களை அடிப்படையாக கொண்ட முதலீட்டுத் திட்டம், Koperasi Mega Maju Selangor Berhad மற்றும் Personal Banc ( பான்க் ) Berhad ஆகிய மூன்று பிரதான முதலீட்டுத் திட்டங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் தலா 50 ஆயிரம் வெள்ளி முதல் 32 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி முதலீடு செய்துள்ளனர் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
தாங்கள் முதலீடாக செலுத்தியப் பணத்திற்கு எதுவும் திருப்பித்தரப்படாமல், அது கூட்டுப்பணம் என்று கூறி, டத்தோ முருகனும் அவரின் தலையிலான குழுவினரும் மோசடி செய்து விட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு முற்பகுதியில் போலீசில் புகார் செய்து இருந்தனர்.
இந்த மோசடி திட்டத்தில் முருகன் சுப்பிரமணியம்,/ ரேவதி பொன்னுசனி, / ஷாலினி,/கிறிஸ்டின் மற்றும் முஹம்மது நாம் அஃபிஃப் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து இருந்தனர்.
இந்த மோசடித் திட்டத்திற்கு பிரதான சந்தேகப் பேர்வழி என நம்பப்படும் டத்தோ முருனுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட போது அவர், அக்குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 25 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்குமாறு பிராகிசியூஷன் சார்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஸ்ருல் தாருஸ் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
எனினும் ஜானீன் தொகை குறைக்கப்பட வேண்டும் என்று டத்தோ முருகனின் வழக்கறிஞர் செய்து விண்ணப்பத்தைத் தொடர்ந்து டத்தோ முருகனை , ஒரு நபர் உத்தரவாதத்துடன் பத்தாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.