சபா,ஜூலை 25-
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 19 வயது இளைஞர் சாலையில், நீர் தேங்கிய குழியிலிருந்து மோட்டார் சைக்கிளுடன் தூக்கியெறியப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு, சபா, பெனாம்பாங், புத்தாதன், பாப்பர் லாமா சாலையின் 20-வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி கடுங் காயங்களுக்கு இலக்கானார்.
அந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் Penampang-இல் இருந்து பாப்பர் -ஐ நோக்கி, பாப்பர் லாமாசாலையில் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழந்தது.
இந்த விபத்து தொடர்பாக தகவல் கொண்டிருப்பவர்கள், புலன் விசாரணைக்கு உதவ முன்வருமாறு பெனாம்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சம்மி நியூட்டன் கேட்டு கொண்டுள்ளார்.