சாகும் வரை தூக்கு தீர்வாகாகது, சுஹாகாம் கூறுகிறது

கோலாலம்பூர், ஜூலை 25-

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படை பயிற்சி வீரர் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அந்த கொலைக்கு காரணமான மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு அப்பீல் நீதிமன்றம் சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்துக தீர்ப்பு அளித்து இருப்பது ஏற்புடையது அல்ல என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகன் தெரிவித்துள்ளது.

நாட்டின் நீதித்துறை பரிணாம வளர்ச்சிக்கு அத்தண்டனை பொருத்தமானது அல்ல. காரணம், ஓர் உயிர் பறிக்கப்பட்டதற்கு மற்றொரு உயிரை காவு கொடுப்பது என்பது சிறந்த தீர்வாக அமையாது என்று சுஹாகன் ஒர் அறிக்கையின் வழி தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளது.

நீதிமன்றம் என்பது தண்டனை அளிப்பதுடன் குற்றவாளிகளை திருத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு நீதிபரிபாலனமாகவும் தொடர்ந்து விடங்கி விட வேண்டும் என்று சுஹாகன் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தூக்குத் தண்டனை முறை, முற்றாக அகற்றப்படுவதற்கு மனித உரிமை அமைப்பு என்ற முறையில் சுஹாகன் தொடர்ந்து போராடும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS