குழந்தை சித்ரவதை / தாயும் காதலுனும் கைது

பொண்டியன்,ஜூலை 25-

பிறந்த எட்டு மாதத்திலே சித்ரவதைக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆண் குழந்தை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த குழந்தையின் 26 வயதான தாயும் அவரது 24 வயது காதலனும் விசாரணைக்காக இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுயநினைவின்றி இருக்கும் அக்குழந்தை தொடர்பில் நேற்று காலை மணி 9.15-க்கு, ஜோகூர், பொண்டியன் மருத்துவமனையின் அதிகாரியிடமிருந்து புகார் பெற்றதை அடுத்து, அக்குழந்தையின் தாயார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொண்டியன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் முஹம்மத் ஷாபிஈ தாயிப் கூறினார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட அக் குழந்தைசுல்தானா அமினா (HSA) ஜோகூர் பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன், சுயநினைவிழந்த நிலையில், தனியார் கிளினிக்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அக் குழந்தையின் சுயநினைவின்மைக்கு மூளையில் ஏற்பட்டுள்ள இரத்த கசிவு காரணமாக இருக்கலாம் என்று குழந்தை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக அவர் விளக்கினார்.

போதுமான பிராணவாய்வுயின்றி அக்குழந்தை அவதியுற்று வந்ததாகவும், அதன் நெற்றி மற்றும் கண்ணோரத்தில் காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சுப்பரின்டென்டான் முஹம்மத் ஷாபிஈ குறிப்பிட்டார்.

தற்போது, ஜோகூர், பொண்டியன் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS