பத்தாங் காளி, ஜூலை 25-
சிலாங்கூர், பத்தாங் காளி-யில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மான முறையில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 17 வயது இளம் பெண், பகாங், திரியங்- கில் நேற்றிரவு கண்டு பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தமது காதலன் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரின் உறவினர் வீட்டில் அந்தப் பெண் இருந்தது பின்னிரவு 12.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் அந்தப் பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.