சிலாங்கூர், ஜூலை 25-
சிலாங்கூர் மாநிலத்தில் மிக துடிப்பாக செயல்படும் சுரங்க நடவடிக்கை நிறுவனம் என்ற முறையில் KL Larut நிறுவனத்தின் கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா-வில் உள்ள 1,040 ஏக்கர் பரப்பளவிலான ஈயம் தோண்டும் செயல்பாட்டை கண்டறிவதற்கு பொருளாதார அமைச்சின் பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப்பிரிவின் 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று வருகைப் புரிந்தனர்.
ஈயம் தோண்டும் நடவடிக்கைக்கு பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் மற்றும் கூட்டரசுபிரதேச கனிமவள மற்றும் புவியறிவியல் இலாகாவின் பரிந்துரையின் பேரில் KL Larut நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு சுரங்க நடவடிக்கைகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
குறிப்பாக, ஈயம் தோண்டும் நடவடிக்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற பாதுகாப்பு நடைமுறைகள், அதன் செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பின்மை முதலிய அம்சங்களை கண்டறிவதற்காக அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். .
KL Larut நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கையை தாங்கள் நேரில் பார்வையிட்டதில் சிறந்த நிர்வாகத்தின் அடிப்படையில் ஈயத்தை எடுப்பது மட்டுமின்றி, மறுசுழற்சியங்கங்களும் முறையாக கடைப்பிடிக்கப்படுவதாக பொருளாதார அமைச்சின் பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப்பிரிவின் உதவி இயக்குநர்ஜவதி யுஸ்ரா பிந்தி ஜைனுதீன் தெரிவித்தார்.
இது KL Larut நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாக நடைமுறையை காட்டுகிறது என்று அவர் புகழ்மாலை சூட்டினார்.

காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை ஈயம் தோண்டும் பகுதிகளை பார்வையிடுதல் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.
KL Larut நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஓம்ஸ் பா. தியாகராஜன், KL Larut நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பழனீஸ்வரன் மற்றும் அதன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பத்மநாபன் ஆகியோர் அதிகாரிகளுக்கு உரிய விளக்கத்தை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஓம்ஸ் தியாகராஜன், சிலாங்கூர் மட்டுமின்றி மலேசிய அளவில் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல் சிறந்த முறையில் ஈயத்தை எடுக்கும் நிறுவனம் என்ற முறையில் அண்மையில் KL Larut நிறுவனத்திற்கு 4 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டதை ஓர் அங்கீகாரமாக கருதுவதாக குறிப்பிட்டார்..
KL Larut நிறுவனத்தற்கு 4 நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதற்கு முழுமையாக உழைத்த நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பத்மநாபன், டாக்டர் பழனீஸ்வரன், இஸ்மாயில் உட்பட இதர பொறுப்பாளர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ தியாராஜன் குறிப்பிட்டார்.
KL Larut நிறுவனத்தின் முயற்சியில் கண்காட்சியகமும் அமைக்கப்பட்டு, மற்ற சுரங்க நிறுவனங்களுக்கும் உரிய வழிகாட்டலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பத்மநாபன் தெரிவித்தார்.