கோலாலம்பூர், ஜூலை 25-
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மூண்டுள்ள கலவரம் தொடர்பில் அந்நாட்டில் உள்ள மலேசியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான போாட்டடத்தின் விளைவாக அந்த நாட்டில் மூண்டுள்ள கலவரம் ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் நைரோபியில் உள்ள மலேசியர்கள், உள்ளூர் அமலாக்கத் தரப்பினர் வழங்கக்கூடிய வழிகாட்டலை பின்பற்றி நடக்குமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.