கோலாலம்பூர், ஜூலை 25-
கடந்த சனிக்கிழமை ஜோகூர் இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள பேரங்காடி மையத்தில் தனது தந்தையுடன் இருந்த போது, 6 வயது சிறுமி ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் கடத்தப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்ட கமிஷனர் M. குமார் தலைமையிலான ஜோகூர் போலீசார் இன்று பாராட்டப்பட்டனர்.
இந்த சிறுமியின் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பாக மீட்ட வேளையில் அந்த சிறுமியை கடத்தியதாக நம்பப்படும் ஆசாமிகளை பிடிப்பதில் வெற்றிக் கண்ட ஜோகூர் போலீசார் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஜி புகழாரம் சூட்டினார்.
இன்று Gelang Patah-வில் கமிஷனர் குமாரையும், அவர் தலைமையிலான உயர் அதிகாரிகளையும் சந்தித்த மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் தமது பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.