கெடா , ஜூலை 25-
கெடா மாநிலத்திற்கும், பினாங்கு மாநிலத்திற்கும் இடையிலான தொடர்பு முறைகளை அடிப்படையாக கொண்டு அவற்றின் வரலாற்று அம்சங்களை கெடா அரசாங்கம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
முந்தைய காலத்தில் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாக பினாங்கு இருந்தது என்பது வரலாற்று ரீதியாக அனைவரும் அறிந்ததே என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்று உண்மையை யாரும் மறைக்கவில்லை. ஆனால், சுதந்திரம் பெற்ற மலேசியாவில் கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தினால் ஆங்கீகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட ட ஒரு மாநிலமாக பினாங்கு விளங்குகிறது.
எனவே ஒரு சுதந்திர மாநிலமான பினாங்கின் தன்னாட்சி உரிமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமோ, வரலாற்றுக்கூறுகளை ஆராய வேண்டிய நிர்ப்பந்தமோ கெடாவிற்கு இல்லை. இந்த உண்மையை கெடா மந்திரி பெசார் சனுசி நார் உணர வேண்டும் என்று சௌ கோன் இயோவ் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். .