கோலா சிலாங்கூர், ஜூலை 25-
கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இஸ்ரேலிய ஆடவர் ஒருவருக்கு துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கணவனுக்கும், மனைவிக்கு ஜாமீன் அனுமதிப்பதில்லை என்று செஷன்ஸ் நீதிமன்றம் மறு உறுதி செய்துள்ளது.
கோலசிலாங்கூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்த தம்பதியர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி அஹ்மத் பைசாத் யஹாயா நிராகரித்தார்.
கோலசிலாங்கூரை சேர்ந்த 41 வயது மாது ஷரீஃபா ஃபராஹா சையத் ஹுசின் மற்றும் அவரின் 43 வயது கணவர் அப்துல் அசிம் முகமது யாசின் ஆகியோர் 1971 ஆம் ஆண்டு அபாயகர ஆயுத சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க சட்டத்தில் இடமில்லை என்பதால் அவர்கள் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தமது தீர்ப்பில தெரிவித்தார்.