கோலாலம்பூர், ஜூலை 25-
பேரா, கோலகங்சாரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றிய பெண் குமாஸ்தா, வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பணத்தை தனக்கு நன்கு அறிமுகமான 11 பேரின் வங்கி கணக்குகளில் மாறியுள்ளார் என்று புக்கிட் அமான் போலீஸ் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் குமாஸ்தா, கடந்த ஜுலை 5 ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக நிறுவனம் உட்பட தனக்கு அறிமுகமானவர்களின் கணக்குகளில் 24 லட்சம் வெள்ளியை பண பட்டுவாடா செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரம்லி குறிப்பிட்டார்.
கடந்த 2023 பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி வரையில் வங்கியின் நிரந்த சேமிப்பாளர்கள் கணக்குகளிலிருந்து அந்தப் பணத்தை வங்கியின் 108 பரிமாற்றத்தின் வாயிலாக பணத்தை பட்டுவாடா செய்துள்ளார்.
பணம் பட்டுவாடா செய்யப்பட்ட வங்கி கணக்குகளுக்கு உரியவர்கள் அனைவரும் அந்த பெண் குமாஸ்தாவின் உறவினர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ரம்லி இதனை அம்பலப்படுத்தினார்.