வங்சா மஜூ , ஜூலை 26-
பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் , கோலாலம்பூர், ஸ்தாபக் –கில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் 20 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.39 மணியாளவில் நிகழ்ந்தது
என்று வங்சா மஜூ மாவட்ட போலீஸ் நிலையத்தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
16 வயதுடைய அந்த இளைஞர் பள்ளி மாணவர் ஆவார் , தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக முகமது லாசிம் குறிப்பிட்டார் .