கோலாலம்பூர், ஜூலை 26-
தீபகற்ப மலேசியாவில் அமைந்துள்ள 8 இடங்களில் அதிகளவிலான வெப்பம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 35 செல்சியஸ் முதல் 37 செல்சியஸ் வரை முதல் நிலை வெப்பம் அளவு ஏற்பட்டுள்ளதாக அது அதன் செய்தியில் குறிப்பிடுள்ளது.
இன்றைய காலை மணி 6.00 மணி வரையிலான நிலவரம்படி, பேராக் மாநிலத்தில் லருட் மற்றும் மாதங், சிலாங்கூரில் கோம்பாக் , கிளந்தானில் கோலா கிராய், பகாங்கில் ரவுப், தெமர்லோ, மாறன், பெந்தோங் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களில் அதிகமான வெப்பம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.