கூலாய், ஜூலை 26-
கூலாய் சட்டமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்அலுவலகம், நான்கு சீனப் பள்ளிகளின் அலுவலகங்கள் மற்றும் கோவில் ஒன்றில் கள்ளத்தனமாக புகுந்து திருடிய 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று விடியல் காலை 3.00 மணி தொடங்கி மாலை மணி 3.00 வரை கூலாய் வட்டார போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, 24 முதல் 29 வயது ஆடவர்கள் தங்கி இருந்த இடத்தில் அலுவலகங்களிலிருந்து திருடிய பொருட்களைப் போலீசார் கண்டெடுத்துள்ளனர் என கூலாய் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் டான் செங் லீ தெரிவித்தார்.
இதே சம்பவம் தொடர்பாக , கடந்த ஜூலை 12 ஆம் நாள் அன்று போலீசார் 41 வயது முதல் 51 வயது கொண்ட நால்வரை விசாரணைக்காக கைது செய்துள்ளதை டான் செங் லீ சுட்டிக்காட்டினார்.