போர்ட் டிக்சன் , ஜூலை 26-
கடந்த திங்கட்கிழமை போர்ட்டிக்சன் வட்டாரத்தில் கத்தியைப் பயன்படுத்தி, தனது காதலிக்கு காயம் விளைவித்ததாக பாதுகாவலர் ஒருவர், போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
27 வயது R. தவமுரளிதரன் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 22 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் போர்ட்டிக்சன், தெலுக் கெமாங், ஜாலான் பந்தாய் பத்து 6- மில் ஓர் அடுக்குமாடி வீட்டில் 28 வயதுடைய தனது காதலியை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக தவமுரளிதரனுக்கு எதிரான குற்றப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து தவமுரளிதரன் விசாரணை கோரினார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடியும் வரையில் தவமுரளிதரனுக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி தெரிவித்தார்.