ஜார்ஜ் டவுன், ஜூலை 26-
டிஏபி மூத்த தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், பழம்பெரும் அரசியல்வாதியுமான லிம் கிட் சியாங்கிற்கு பினாங்கு மாநிலத்தின் மிக உயரிய விருதான தர்ஜா உத்தமா பாங்குவான் நெகேரி எனும் டத்தோ ஸ்ரீ உத்தாமா அந்தஸ்தை குறிக்கும் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்படவிருக்கிறது.
பினாங்கு ஆளுநர் அஹ்மத் புசி அப்துல்க் ரசாக் –க்கிடமிருந்து நாளை சனிக்கிழமை பல்வேறு உயரிய விருதுகளை பெறுகின்றன 142 பேர் கொண்ட பிரமுகர்கள் பெயர் பட்டியலில் லிம் கிட் சியாங் முதலிடத்தில் உள்ளளார்.
கடந்த ஆண்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் டான் ஸ்ரீ விரது வழங்கி கெளரவிக்கப்பட்ட மலேசியாவில் நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரான லிம் கிட் சியாங், மற்றொரு உயரிய விருதை மாநில அளவில் பெறவிருக்கிறார்.
டிஏபி தலைவர்கள் தங்கள் பதவி காலத்தில் உயரிய விருதுகளை பெறக்கூடாது என்று அக்கட்சியில் எழுதப்படாத சாசனத்தை கொண்டு வந்து, அக்கொள்கைக்கு இலக்கணமாக விளங்குபவர் 83 வயதான லிம் கிட் சியாங் என்பது குறிப்பிடத்தக்கது.