மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..

நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் கலக்கி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான  அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன்.  தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் அதிக பெண் ரசிகைகளை ஈர்த்தார் மாதவன். 

தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் மாதவன் சமீபத்தில் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள இந்த அப்பார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 17.5 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 4200 சதுர அடியில் பரந்து விர்ந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகள் உள்ளதாம். இதற்காக மாதவன கடந்த 22-ம் தேதி ரூ.1.05 கோடி ஸ்டாம்ப் கட்டணத்துடன் ரூ. 30,000 பதிவு கட்டணமும் செலுத்தியதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS