ஷா ஆலம், ஜூலை 26-
நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களை மக்கள் என்னெற்றும் நினைவுக்கூர வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக்கொண்டார்.
நாடு பல்வேறு வகையான புதிய மிரட்டல்களை சந்தித்து வரும் நிலையில் நடப்பு மாற்றத்தினால் ஏற்படக்கூடிய ஊடுருவல், காலனித்துவ ஆக்கிரமிப்பு போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நாட்டை பாதுகாத்து வரும் வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூருவது ஒரு முக்கிய அம்சமாகும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
வரும் ஜுலை 31 ஆம் தேதி வீரர்கள் தினத்தையொட்டி சிலாங்கூர் அரச முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இதனை தெரிவித்துள்ளார்.