ஷா ஆலம், ஜூலை 26-
உணவுப் பண்டங்கள் மற்றும் பானத்தில் சீனியின் பயன்பாட்டை குறைப்பது மற்றும் விலையை குறைப்பது முதலிய பிரச்சசார இயக்கத்தை அமல்படுத்துவதற்கு குறைந்த சீனி பயன்பாடு தொடர்பில் உணவக உரிமையாளர்கள் மற்றும் பான தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு சீன பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். இதனை தேசிய அளவிலான பிரச்சாரமாக முன்னெடுப்பதற்கு உணவக உரிமையாளர்கள் மற்றும் பான தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்ற அமைச்சர் விளக்கினார்.
குறிப்பாக சீனி குறைக்கப்பட வேண்டும். அது தொடர்புடைய உணவுப்பொருட்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்மிசான் முகமட் அலி விளக்கினார்.