கோலாலம்பூர், ஜூலை 26-
திருட்டுச் சம்பவம் ஒன்றுக்கு தீர்வு காண்பதற்கு 10 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டு, பெற்றதாக லாரி ஓட்டுநரும், அமலாக்க ஏஜென்சி அதிகாரி ஒருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
பினாங்கு SPRM அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்த இருவரில் அமலாக்க அதிகாரிக்கு 2 நாள் தடுப்புக்காவல் அனுமதி பெற்றப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநருக்கு ஜுலை 29 ஆம் தேதி வரை நான்கு நாள் தடுப்புக்காவல் ஆணை பெறப்பட்டுள்ளது.
இவ்விருவரும் இன்று காலையில் பினாங்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.