நச்சு உணவு, நான்காம் ஆண்டு மாணவர் மரணம்

கோத்தா கினபாலு, ஜூலை 26-

நச்சு உணவு உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும், சபா,சண்டகன் தொடக்கப்பள்ளியை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் உயிரிழந்தான்.

நேற்று வியாழக்கிழமை அந்த மாணவன் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிற்றுண்டி சாலையில் விற்கப்பட்ட உணவை உட்கொண்டு அந்த மாணவன் இறக்கவில்லை. மாறாக, தனது தாயாருடன் வீட்டில் சாப்பிட்ட உணவின் காரணமாக அந்த மாணவன் உயிரிழந்துள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சபா மாநில கல்வி இயக்குநர் டத்தோ ரைசின் சைடின் தெரிவித்தார்.

நச்சு உணவு உட்கொண்டதன் காரணமாக அந்த மாணவன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று கடந்த ஜுலை 23 ஆம் தேதி WhatsApp மூலம் பள்ளி ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS