கோலாலம்பூர், ஜூலை 26-
கோலாலம்பூர் மாநகரில் அந்நிய நாட்டவர்களின் வர்த்தக வளாகங்கள் பெருகி வரும் வேளையில் குடிநுழைவுத்துறை தொடர்ச்சியாக அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இன்று மாலையில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, டாமாய் கோம்ப்ளெக்ஸ் – ஸில் அந்நிய நாட்டவர்களால் வழிநடத்தப்பட்டு வரும் உணவகங்கள், மளிகைக்கடைகள் மற்றும் முடித்திருத்தம் நிலையங்கள் ஆகியவற்றில் குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தினர்.
வாடிக்கையாளர்களாக அந்நிய நாட்டவர்கள் நிறைந்துள்ள அந்த வர்த்தகத் தளங்களில் 52 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாமல் இருந்த 32 சட்டவிரோதப் பிரஜைகளை அதிகாரிகள் கைது செய்ததாக குடிநுழைவுத்துறையின் கோலாலம்பூர் இயக்குநர் வான் முகமது சௌபீ வான் யூசோஃப் தெரிவித்தார்.