PRM கட்சியுடன் தோழமைக் கொள்ள பேச்சு

ஜொகூர், ஜூலை 26-

மலேசிய சோஷலிச கட்சியான PSM, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பழமை வாய்ந்த அரசியல் கட்சியான பார்ட்டி ராக்யாட் மலேசியா எனப்படும் PRM- முடன் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக PSM துணைத் தலைவர் S. அருட்செல்வன் தெரிவித்தார்.

வருகின்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது சக்தியாக தேர்தல் களத்தில் நிற்பதற்கு மக்கள் நலனுக்காக போராடக்கூடிய மற்ற அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டிய அவசியம் PSM- மிற்கு ஏற்பட்டுள்ளது என்று அருட்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றவாது சக்தியாக உருவெடுக்கவிருக்கும் தங்கள் கூட்டணி, நாட்டில் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். இல்லையென்றால், இந்த மூன்றாவது அணியை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்று அருட்செல்வன் தெரிவித்தார்.

ஜோகூர்பாரு, கெம்பாஸ், தாமன் அங்கெரிக் சமூக மண்டபத்தில் இன்று நடைபெற்ற PSM- கட்சியின் 26 ஆவது மாநாட்டின் தொடக்கவிழாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அருட்செல்வன் இதனை குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS