பூச்சோங், ஜூலை 26-
பூச்சோங், பந்தர் புச்சோங் ஜெயா-வில் வாடகை அறையாக பயன்படுத்தப்பட்ட Hostel தங்கும் விடுதி ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானர். இதர 12 பேர் அதிர்ஷ்டசவசமாக உயிர் தப்பினர்.
இத் தீ சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மஸ் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து, தீயணைப்பு வண்டியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பூச்சோங் நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், தீ மற்ற இடத்திற்கு பரவாமல் முழுமையாக கட்டுப்படுத்திய போதிலும் தீ ஏற்பட்ட அந்த கட்டடத்தின் மூன்றாவது மாடி 100 விழுக்காடு அழிந்ததாக அஹ்மஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.
மூச்சுத் திணறலுக்கு ஆளான மாது ஒருவர், உரிய சிகிச்சைக்காக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மஸ் முக்லிஸ் தெரிவித்தார்.