ஜோகூர்,ஜூலை 28-
முன்னாள் தங்கும்விடுதி வேலையாள் ஒருவரின் மண்டை ஓடு உடையும்படி வெட்டிய 5 ஆடவர்களைப் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது என Johor Bahru Selatan வட்டார போலீஸ் தலைவர் துணை Komisioner Raub Selamat தெரிவித்தார். 25 முதல் 38 வயதிற்குட்பட்ட அந்த 5 ஆடவர்களின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குழந்தைக்கு பால் மாவு வாங்குவதற்காக வாங்கிய 300 வெள்ளி கடனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்ட நபரோடு ஏற்பட்ட வாய் தகராற்றினால், தலைகவசம் மற்றும் இருப்பு கொண்டு மண்டை ஓடு உடையும் படி தாக்கி உள்ளார்கள் என போலீஸ் தலைவர் மேலும் கூறினார்.