சமூக ஊடகங்களில் காதலில் விழுந்த பெண் 658 ஆயிரத்து 166 வெள்ளியை இழந்தார்

ஜோகூர், ஜூலை 29-

தந்தி, புலனம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கிடைத்த அறிமுகத்தால், காதல்வயப்பட்ட 38 வயது பெண் ஒருவர், ஏமாற்றுப்பேர்வழியிடம், தமது சேமிப்புப் பணமான 658 ஆயிரத்து 166 வெள்ளியை பறிக்கொடுத்தார்.

ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், மோசடி பேர்வழி வழங்கிய அழகு சாதன வர்த்தக முகவர் எனும் வேலையின் மீது அப்பெண் ஆசைக் கொண்டார்.

அதன் விளைவாக, கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் இம்மாதம் 12ஆம் தேதி வரையில், ஏமாற்றுப்பேழி வழங்கிய பொருளக கணக்குக்கு, அப்பெண் 30 முறை பணப்பரிவர்த்தனையை செய்துள்ளார்.

பின்னர், ஏமாற்றுப்பேர்வழியுடன் வீடியோ காணொளியில் பேசிய போது, புலனம் செயலியில் உள்ள முகமும் தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நபரின் முகமும் வெவ்வேறாக இருப்பதை உணர்ந்த அப்பெண், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நேற்று போலீசில் புகாரளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS