சிறுமியைக் கடத்திய ஆடவரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்!

ஜோகூர், ஜூலை 29-

ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி பேரங்காடியில் காணாமல் போன 6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய்- வை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவரின் தடுப்புக்காவலை, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் 7 நாள்களுக்கு நீட்டிப்பதற்கு, போலீஸ் அனுமதியைக் கோரவுள்ளது.

சிலாங்கூர், பத்தாங் காளி-யிலிலுள்ள மலிவுவிலை தங்கும்விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அச்சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட போது, அவருடன் இருந்த அவ்வாடவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது முதல்கட்ட தடுப்புக்காவல் இன்றுடன் முடிவடையும் சூழலில், விசாரணையை தொடரும் நோக்கில், தடுப்புக்காவல் நீட்டிக்கப்படுவதாக, JOHOR போலீஸ் தலைவர்கமிஷனர் எம் . குமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS