ஜொகூர், ஜூலை 29-
நெகிரி செம்பிலான்,காஜாங்- செரம்பன் நெடுஞ்சாலை லெகாஸ்-சின் 36ஆவது கிலோமீட்டரில், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 17 வயது பையன் மோதி, சாலை போக்குவரத்து போலீஸ் உறுப்பினர் உள்பட அவ்விருவரும் படுகாயங்களுக்கு இலக்காகினர்.
நேற்று அதிகாலை மணி 2 அளவில், 36 வயதுடைய போலீஸ் உறுப்பினர், சாலையில் அடாவடித்தனமாக நடந்துக்கொள்பவர்களுக்கு எதிரான சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த விபத்து நேர்ந்தது.
எதிர் தடத்தில் நுழைந்த அப்பையன், அவரை மோதியதாக கூறிய சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் மொஹமட் ஹட்டா சே தின் அதில், அவ்விருவருக்கும் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அவ்விருவரும் சிகிச்சைக்காக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை, விபத்து குறித்து போலிஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக, ஹட்டா கூறினார்.