காஜாங், ஜூலை 29-
காஜாங் ,ஜாலான் டேமிங் சாரி-யில் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை மடக்கி, அச்சுறுத்தி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ்காரர்கள், அந்த அந்நியப் பிரஜையை மடக்கி மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்படும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகார் அடிப்டையில் அந்த இரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் அந்த இரு போலீஸ்காரர்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.