பினாங்கு, ஜூலை 29-
நில விற்பனை தொடர்பில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ்- விற்கு எதிராக மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி, ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
நில விற்பனை தொடர்பில் தனது முக நூலில் சௌ கோன் இயோவ் பதிவேற்றம் செய்தியுள்ள அவதூறு அறிக்கை தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் இராமசாமி தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நில விற்பனை தொடர்பில் பினாங்கு மேம்பாட்டுக்கழகமான PDC மற்றும் Umech Land – க்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில் தமது ஈடுபாடு இருந்ததைப் போல ஒரு பொய்யான செய்தியை முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி முகநூலில் பபதிவேற்றம் செய்துள்ளார் என்று தமது வழக்கு மனுவில் டாக்டர் இராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.