பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-
லஞ்ச ஊழல் வழக்கில் சபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி ஜிஸி இசெட் அப்துல் சமத் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
மேல்முறையீடு மீதான பூர்வாங்க வழக்கு விசாரணை, அப்பீல் நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெறவிருந்தது. எனினும் உடல் நலக்குறைவின் காரணமாக அந்த கிணபடங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
22 லட்சம் வெள்ளி மற்றும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளி சம்பந்தப்பட்ட இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நிதிமன்றம் அத்தம்பதியரை விடுதலை செய்தது.