கோலாலம்பூர், ஜூலை 29-
தமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பெர்சத்து கட்சியின் கோம்பக் சேத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மன் இதாம்- மின் முன்னாள் உதவியாளருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 13 ஆண்டு சிறை மற்றும் இரண்டு பிரமிபடித் தண்டனை விதித்தது.
40 வயது முகமது ஸுல்பஹிமிம் மஹ்ட்ஸிர் என்ற அந்த உதவியாளர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ ஹர்தமாஸ்-ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்த தவறிவிட்டார் என்பதுடன் பிராசிகியூஷன் தரப்பு போதுமான ஆதாரஙகளை நிரூபித்துள்ளது என்று நீதிபதி நோ ஹஸ்னா அப்துல் ரசாக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண், மதுப்போதையில் இருந்ததை குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தனக்கு சாதகமான பயன்படுத்திக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அழைத்து செல்வதாக கூறி, அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமையை புரிந்துள்ளார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.