பினாங்கு, ஜூலை 29-
பினாங்கு மாநிலத்தின் பிரதான கடற்பகுதியான பத்து ஃபெரிங்கி – கடலோரப்பகுதியில் குதிரையேற்றம், குதிரை சவாரி முதலிய நடவடிக்கைகளுக்கு வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தடை விதிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடலோரப்பகுதியில் குதிரை சவாரி நடவடிக்கையினால் எழக்கூடிய பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் கடலோர தூய்மையின்மை தொடர்புடைய புகார்கள் கிடைக்கப்பெற்று இருப்பதைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக பினாங்கு ஊராட்சிமன்ற, நகர திட்டமிடுதல் மற்றும் புறநகர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லை தெரிவித்தார்.
குதிரை நடவடிக்கைகளுக்காக கடலோரப்பகுதியில் குதிரைகளை கட்டுவதற்கு அனுமதியின்றி இரும்புக்கம்பிகளை ஊன்றுதல், அந்த விலங்கினத்தை முறையாக பராமரிக்காதது போன்ற புகார்களையும் தாங்கள் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.