பிரதமரின் பதவிக் காலம் 10 ஆண்டுகளாக வரையறுக்கப்பட வேண்டுமா?

கோலாலம்பூர், ஜூலை 29-

பிரதமரின் பதவிக்காலம் 10 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் வரையுறுக்கப்பட வேண்டும். இந்த உத்தேசப் பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமானால் இதனை விவாதிப்பதற்கு மக்களவையின் விதிமுறைகளுக்கு ஏற்ப சிறப்பு மக்களவைக்கூட்டம் , கூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்..

மக்களவையின் சட்ட ஒதுக்கீட்டின் கீழ், இவ்விவகாரம் சிறப்பு மக்களவைக்கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்னதாக, மிக ஆழமாக விவாதிக்கப்பட்டு, அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே இவ்விவகாரம் மீதான உத்தேச சட்ட மசோதாவை, விவாதத்திற்காக மக்களவையில் தாக்கல் செய்ய முடியும் என்று அசாலினா ஓத்மான் குறிப்பிட்டார்.

பிரதமர் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதற்கான பதவிக்காலத்தின் கால வரம்பை தீர்மானிக்க வேண்டுமானால் அதில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்டுள்ளளது.

எனவே கொள்கை வரைவு உள்ளடக்கப்பட்ட இவ்விவகாரம், முதலில் மிக ஆழமாகவும், விரிவாகவும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்று மக்களையில் எழுத்துப்பூர்வமான கேள்வி பதிலில் அமைச்சர் அசாலினா ஓத்மான் இதனை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS