வாகனத்தை செலுத்திய 12 பையன்; தந்தையிடம் விளக்கம் பெறப்பட்டது

கோலாலம்பூர், ஜூலை 30-

சிலாங்கூர், புச்சோங், தாமன் புத்ரா இம்பியானா குடியிருப்பு பகுதியில், 12 வயது சிறுவன், தனது இரு தம்பிகளை ஏற்றிக்கொண்டு PERODUA VIVA வாகனத்தை அபாயகரமாக செலுத்திய சம்பவம்.

சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ள காணொலியைத் தொடர்ந்து, போலீஸ் சம்பந்தப்பட்ட பையனின் தந்தையிடம் நேற்று விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதாக, SEPANG மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் வான் கமருல் அஸ்ரன் வான் யூசோப் தெரிவித்தார்.

விசாரணையில், அப்பையன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 8 அளவில், அந்த வாகனத்தை செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

அவரது தந்தை தாமாகவே போலீஸ் நிலையத்திற்கு விளக்கம் அளிக்க வந்திருந்த நிலையில், விசாரணை தொடர்வதாக,வான் கமருல் கூறினார்.

WATCH OUR LATEST NEWS