கோலாலம்பூர், ஜூலை 30-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின், 441.2ஆவது கிலோமீட்டரில், இன்று காலையில் நிகழ்ந்த ஒரு வாகனம், இரு ட்ரெலர்-களை உட்படுத்திய விபத்து காரணமாக, சுங்கை புவாயா-விலிருந்து ராவாங் வரையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட விபத்தினால், இரு வழி சாலைகளும் முடக்கம் கண்ட வேளை, வாகனங்கள் நிகழ்விடத்தைக் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.
காலை மணி 8.15 வரைக்குமான நிலவரத்தின்படி, விபத்துக்குள்ளான வாகனத்தையும் ட்ரெலர்களையும் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, வாகனமோட்டிகள் மாற்றுவழி சாலைகளில் செல்லும்படி, PLUS நிறுவனம் X தள பதிவின் வழி கேட்டுக்கொண்டது.