துன் டாக்டர் மகாதீர், IJN-லிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

தேசிய இருதயக் கழகம் – IJN-ன்னின் இருமல் காரணமாக இரு வாரங்கள் சிகிச்சையைப் பெற்றுவந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

99 வயதுடைய மகாதீர்-ரின் உடல்நிலை சீரடைந்திருப்பதாகவும், அவர் வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உதவியாளர் சுஃபி யூசோஃப் கூறியதாக, ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில், தனது 99 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய மகாதீர் , 5 நாள்கள் கழித்து இம்மாதம் 15ஆம் தேதி IJN-ன்னில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS